கோவில்பட்டியில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம்
கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் .வெங்கடேசன் தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினர், மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை துறையினர் சேர்ந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடத்தினார்கள்.
இனாம்மணியாட்சி ஜங்ஷனில் தொடங்கி,கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், புது ரோடு இறக்கம், எம்.எல்.ஏ. ஆபீஸ் ஜங்ஷன் வழியாக கிழக்கு பார்க் ரோடு வந்து மேற்கு காவல் நிலையத்தில் அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தது.
நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்த அணிவகுப்பில் 140 -க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி மற்றும் கோவில்பட்டி காவல் உட்கோட்ட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர். ..