காந்தாரி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
![காந்தாரி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை](https://tn96news.com/wp-content/uploads/2024/04/ca1acdb0-8a0d-45cc-8e90-0b0ef7039979-850x560.jpeg)
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் 58-வது பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளன்று பத்திரகாளி அம்மன் கோவில் மாதர் சங்கத்தினரால் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது,
8ம் நாளான இன்று காலை முச்சந்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் குடி அழைப்பும் அபிஷேக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து அக்னிசட்டி திருவீதி உலா, உச்சிகால பூஜை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு மேல் முளைப்பாரி திருவீதி உலா, 9 மணிக்கு மேல் 108 அக்னி சட்டி,54 அக்னி சட்டி திருவீதி உலா வருதல் நடக்கிறது. இரவு 11 மணிக்கு பூக்குழி திருவிழாவும், நள்ளிரவில் சாமக்கொடை பூஜையும் நடக்கும். அதிகாலை 2 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)