திருமாவளவனுடன் நடிகர் பிரசாந்த் திடீர் சந்திப்பு
![திருமாவளவனுடன் நடிகர் பிரசாந்த் திடீர் சந்திப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/03/03a1bd68-5b43-4011-9b26-4f9bde1c72ef-850x560.jpeg)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தொகுதி உடன்பாடு பற்றி பேச்சு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று பிரபல நடிகர் பிரசாந்த், தனது தந்தை தியாகராஜனுடன் திருமாவளவனை சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலை கூட்டம் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது,.
ஏற்கனவே தனது ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நடிகர் பிரசாந்த் ஒவ்வொரு ஊரிலும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் .வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)