250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் ; ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. ஏற்பாடு
.ஓட்டப்பிடாரம் அருகே கீழஅரசடி ஊராட்சி வெள்ளபட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட கிளை அஞ்சலக திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கிளை அஞ்சலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்க தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையாவிடம் ரூபாய் 25,000 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா , ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன், தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா, உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் வசந்த சிந்துதேவி, ஹேமாவதி, அருட்தந்தை வினித் ராஜா மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.