காவலர் வீர வணக்க நாள்
![காவலர் வீர வணக்க நாள்](https://tn96news.com/wp-content/uploads/2023/10/IMG-20231021-WA0061.jpg)
ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” அனுசரிக்கப்பட்டது..’
மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 54 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , நினைவு மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரகம் சுரேஷ், மணியாச்சி லோகேஷ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி தென்பாகம் ராஜாராம், வடபாகம் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மாரியம்மாள், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு மயிலேறும்பெருமாள், மத்திய பாகம் அய்யப்பன், உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)