• May 17, 2024

குற்றாலம் அருவியில் 1 2 அடி நீள ராட்சத பாம்பு ; சுற்றுலா பயணிகள் அலறி ஓட்டம்

 குற்றாலம் அருவியில்  1 2 அடி நீள ராட்சத பாம்பு ; சுற்றுலா பயணிகள் அலறி ஓட்டம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களாக சீசன் நிலவி வருகிறது. தென்மேற்கு மலை பகுதியில் கனமழை கராணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் பகலில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். எல்லா அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவியில் நிறைய பேர் மகிழ்ச்சியுடன் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீர் என்று ராட்சத பாம்பு ஒன்று அருவியில் விழுந்தது. குளித்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் மீது விழுந்த அந்த பாம்பை கண்டு அவர் பயத்தில் அலறினார். இதயத்தை பார்த்து மற்றவர்களும் பயத்தில் அலறினார்கள்.

அந்த பாம்பு சுமார் 1 2 அடி நீளம் இருந்தது. அது ராஜ நாகமாகும் பாம்பை கண்டு நடுங்கி கொண்டிருந்தவர்கள் மத்தியில் அந்த ராஜ நாகம் மெதுவாக பெண்கள் பகுதியை நோக்கி ஊர்ந்து சென்றது. பின்னர் அருகில் உள்ள குற்றாலநாதர் கோவில் அருகே பதுங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து அந்த பாம்பை தேடி கண்டுபிடித்து லாவகமாக பிடித்து கொண்டு சென்றனர். அதன்பிறகே அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
——–

#ராஜநாகம்#ராட்சத ராஜநாகம்# ராஜநாகம் பற்றிய செய்திகள், ராஜநாகம்#ராஜநாக பாம்பை அடித்து விரட்டிய வளர்ப்புக் கோழி #ராஜ நாகம் வரலாறு, #ராஜ நாகம் பாம்பு, #சிறந்த 6 நாக பாம்புகள்#நல்ல பாம்பு #கிங்கோப்ரா

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *