மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக திருக்குறள்

 மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக திருக்குறள்

.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து மாணவர்களுக்கும் பிறந்தநாள் அன்று திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குறளை படித்து குறள்நெறி வழி நடக்கவும், மாணவர்களின் கல்வி மேம்படவும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த் நிகழ்ச்சிக்கு  பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார்.

நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய 8ம்வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ, 7ம் வகுப்பு மாணவி ஜனனி, 5ம் வகுப்பு மாணவர் அஜய்குமார், 2ம் வகுப்புமாணவி சிவசக்தி, 5ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ ஆகியோருக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அமலா தேவி, ஜெயச்சந்திரா, பூங்கொடி, மலர்க்கொடி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *