திண்டுக்கல் மாநகராட்சி பெண் ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
![திண்டுக்கல் மாநகராட்சி பெண் ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை](https://tn96news.com/wp-content/uploads/2023/06/a5a02c94-4511-4d39-a649-b9f8d3e6fc4e-850x560.jpeg)
காஞ்சீபுரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த மாதம் நியமிக்கபப்ட்டு பதவி ஏற்றார்.
திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி காலனி 1வது தெருவில் தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் அலுவலக விஷயமாக நடந்த கூட்ட்டத்தில் கலந்து கொண்டபிறகு நேற்று இரவு மகேஸ்வரி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 ,மணி அளவில் .லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்கு சென்றனர்.
ஏற்கனவே காஞ்சீபுரத்தில் நகராட்சி ஆணையராக இருந்தபோது மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை மதியம் வரை முடியவில்லை. தொடர்ந்து நீடிக்கிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)