கோவில்பட்டி பாரதிநகர் காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
![கோவில்பட்டி பாரதிநகர் காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்](https://tn96news.com/wp-content/uploads/2023/06/cd2f59d9-5b54-492b-b9b1-df2e2a9de2d4-850x560.jpeg)
கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், சிறப்பு யாகங்கள் கலச பூஜை, ஜெபம், பாலாபிஷேகம், கோ பூஜை, ஆராதனைகள் நடைபெற்றது
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர். 32வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், 33வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சண்முகராஜ், தொழிலதிபர் பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு கமிட்டியினர் முத்துப்பாண்டி, முருகன், வேல்முருகன், மதன், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்,
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)