காற்றாலை கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு

 காற்றாலை கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருவதால்  பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து  கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது அவர்கள் கூறும்போது, “எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூக்கள்  கருகி நாசமாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சு நடத்தி சமரசம்செய்தனர். அதன்பிறகு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *