கோவில்பட்டியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் : 138 ,கோவை 78,மதுரை 125, சேலம் 59, திருச்சி – 100 டாஸ்மாக் மதுக்கடைகள், இன்று(வியாழக்கிழமை) முதல் மூடப்பட்டன, மதுரை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடுவிழா கண்டுள்ளன,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 125 டாஸ்மாக் கடைகளில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கோவில்பட்டியில் மட்டும் 4 கடைகள் மூடப்பட்டன . கோவில்பட்டி புதுரோட்டில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே, சத்யபாமா கல்யாண மண்டபம் அருகே உள்ள தெரு, பால்பாண்டி பேட்டை தெரு, சங்கரலிங்கபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 4 மதுக்கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
இந்த கடைகள் முன்பு பகல் 12 மணிக்கு கடை திறக்கப்படும் என்று காத்திருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் வேறு கடைகள் நோக்கி படைஎடுத்தனர்.
மேலும் தூத்துக்குடி பொன்னகரம், கிருஷ்ணராஜபுரம், அண்ணாநகர் மெயின் ரோடு, பிரையண்ட்நகர், திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, டபிள்யூ.ஜி.சி. ரோடு, புதிய பஸ் நிலையம், பாலவிநாயகர் கோவில் தெரு, தூத்துக்குடி கல்லூரிநகர், கயத்தார் கடம்பூர் ரோடு, தெற்கு சுப்பிரமணியபுரம், உடன்குடி செட்டிகுளம் மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் மூடப்பட்டன,