கோவில்பட்டியில் பெண்ணின் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு -பரபரப்பு

 கோவில்பட்டியில் பெண்ணின் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு -பரபரப்பு

கோவில்பட்டி சுபா நகரில் உள்ள துரை என்பவர் ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மந்தித்தோப்பைச் சேர்ந்த பாலு என்பவருடைய மகள் தங்கம் (வயது 21)பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் மந்தித்தோப்பில் இருந்து அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வருவது வழக்கம்.
நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரை எடுத்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதனால் பயந்து போன தங்கம், உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். ‌
அவர்கள் கம்பை எடுத்து இருசக்கர வாகனத்தை தட்டி பார்த்தபோது பாம்பு வெளியே வரவில்லை. உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருசக்கர வாகனத்தில் தேடிய பொழுது கிடைக்கவில்லை.


மேலும் பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் தெளித்தும் பாம்பு வெளிய வரவில்லை.‌இதனால் உடனடியாக இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவரை வரச் சொல்லி ஸ்கூட்டரின் பக்கவாட்டு பகுதியை கழற்றிய போது ஒரு குட்டி பாம்பு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *