அப்பனேரி உள்பட 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் சேர்க்ககோரி ஜூன் 19 மறியல் போராட்டம்

 அப்பனேரி உள்பட 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் சேர்க்ககோரி ஜூன் 19 மறியல் போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி, ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, இளையரசனேந்தல் உரிமை மீட்புக் குழு தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் தலையில் முக்காடு அணிந்தும், ஒற்றை காலில் நின்றும் நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் கோட்டாட்சியர்  மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

‘இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த அப்பனேரி, அய்யனேரி உள்பட 12 பஞ்சாயத்துகள் மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனில் தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்படுகிறது.

இந்த 12 பஞ்சாயத்துகளும் கோவில்பட்டி நகரின் அருகாமையில் உள்ளன. எனவே இந்த 12 பஞ்சாயத்துகளையும் கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கவும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அலகில் சேர்க்கவும் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்,. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி அரசுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே =இனிமேலாவது இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடு க்கவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 19-ந்தேதி கோவில்பட்டி பயனியர் விடுதி முன்பு ஆயிரம் பேரை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *