363 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா

 363 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 கிராம குடியிருப்புகளுக்கான ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் (ஜல் ஜீவன் மிஷன்) திட்ட அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு திட்டத்துக்கான  அடிக்கல் நாட்டினார். நிகழச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *