கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: ஓடிசா, பெங்களுரு, சென்னை, டெல்லி அணிகள் வெற்றி

 கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி:  ஓடிசா, பெங்களுரு, சென்னை, டெல்லி அணிகள் வெற்றி

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடந்து வருகிறது. 28ம் தேதி வரை  பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடக்க்கும்.

11 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.

ஐந்தாம் நாளான நேற்று  நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரெயில் வீல் பேக்டரி மற்றும் ஒடிசா நிஸ்வாஸ் ஆக்கி சந்தித்தன, இந்த ஆட்டம் தொடங்கிய  7-வது நிமிடத்தில் ஒடிசா  அணி வீரர் ராஜத் திர்கே பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

14-வது நிமிடத்தில் பெங்களூரு அணி வீரர் தங்கப்பாண்டியன் பீல்டு கோல் முறையில் பதிலுக்கு ஒரு கோல் போட்டார். அடுத்த 5 

நிமிடத்தில் பெங்களூரு, அணி வீரர் முத்துக்குமார் பீல்டு கோல் முறையில் இன்னொரு  கோல் போட்டார்.  இதனால் ஆட்டம் சூடு பிடித்தது.

ஒடிசா அணி வீரர்கள் ஆட்டம் வேகமெடுத்தது. 37-வது நிமிடத்தில் ஒடிசா, வீரர் சுந்தீப் மின்ஸ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  49-வது நிமிடத்தில் மீண்டும் ஒடிசாவுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த  அணி வீரர் ஜார்ஜ் கிர்கே பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

மறுபடியும் 51-வது நிமிடத்தில் சா அணி வீரர் ராஜத் திர்கே பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டு  எண்ணிக்கையை உயர்த்தினார். அதன்பிறகு யாரும் கோல் போடவில்லை. இதனால் இதில் 4:2 என்ற கோல் கணக்கில் ஒடிசா  நிஸ்வாஸ் ஆக்கி அணி வெற்றி பெற்றது. சிறந்த ஆட்டக்காரர் விருது ஒடிசா நிஸ்வாஸ் அணி வீரர் ராகுல் எக்காவுக்கு வழங்கப்பட்டது

ஆல்பர்ட் ஜான் மற்றும் கோபிநாத் ரவி ஆகியோர் போட்டியின்  நடுவர்களாக செயல்பட்டனர்.

.  சென்னை அணிகள் மோதல்

16-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் மற்றும் சென்னை, தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் மோதின. இரு அணிகளுமே சென்னை என்றாலும் ஜி.எஸ்.டி.அணியின் ஆட்டத்துக்கு போலீஸ் அணியினரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் ஹாசன் பாஷா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  39-வது அதே  அணி வீரர் பிரபு பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் போட்டார்.  

48-வது நிமிடத்தில் மீண்டும் அதே  அணி வீரர் தமிழரசன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

3 கோல்கள் வாங்கிய போலீஸ் அணி வீரர்கள் பதில கோல் போடா முடியாமல் தவித்தனர். ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக 54-வது நிமிடத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி சென்னை, தமிழ்நாடு போலீஸ் அணி வீரர் பாலமுருகன் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 

அதன்பிறகு யாரும் கோல் போடவில்லை. இறுதியில் இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வெற்றிப் பெற்றது. 

சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் தமிழரசனுக்கு வழங்கப்பட்டது.  சுப்பையா தாஸ் மற்றும் பிரைஜு ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

பேங்க் அணிகள் சந்தித்தன

17-வது லீக் ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகிய அணிகள் மோதின 

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வீரர்கள் ஆட்டம் அபாரமாக இருந்தது. 7வது நிமிடத்தில் அந்த அணியை சேர்ந்த சுமித் டாப்போ, 14வது நிமிடத்தில் நிங்கொம்பாம் ஜென் ஜென் சிங், 29 மற்றும் 42வது நிமிடங்களில் விஷால் அன்டில் (2), 44வது மற்றும் 54வது நிமிடங்களில் நவீன் அன்டில் (2), 56வது நிமிடத்தில் சாடெண்டர் குமார் ஆகியோர் பீல்டு கோல் முறையில் ஏழு கோல்களும்,  60வது நிமிடத்தில்  பகத் சிங் தில்லான் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் என  மொத்தம் 8 கோல்கள் அடித்து அசர வைத்தனர்,

சென்னை, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி வீரர் ரூபிந்தர் பால் சிங் 52 மற்றும் 58வது நிமிடங்களில் பெனால்டி கார்னர் முறையில் இரண்டு கோல்கள் போட்டார். இறுதியில் இதில் 8:2 என்ற கோல் கணக்கில் டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றிப் பெற்றது. 

சிறந்த ஆட்டக்காரர் விருது பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வீரர் விஷால் அன்டிலுக்கு வழங்கப்பட்டது.  சுரேஷ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்,.

கனரா பேங்க்-கஸ்டம்ஸ்

18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா பேங்க் மற்றும் புனே கஸ்டம்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இரு அணி வீரர்களும் சம பலத்துடன் இருந்தனர். ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் சோமையா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  

35-வது நிமிடத்தில் புனே, கஸ்டம்ஸ் அணி வீரர் வெங்கடேஷ் கென்சி பீல்டு கோல் முறையில் பதிலுக்கு ஒரு கோல் போட்டார். 

38-வது நிமிடத்தில் பெங்களூரு, கனரா பேங்க் அணி வீரர் அபிஷேக் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டு அணிக்கு பலம் சேர்த்தார். அதன்பிறகு பதில் கோல் போடுவதற்கு .  கஸ்டம்ஸ் அணி வீரர்கள் எவ்வளவோ போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்றது. 

சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு கனரா பேங்க் அணி வீரர் பிரிதிவிராஜ்க்கு வழங்கப்பட்டது. கோபிநாத் ரவி மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *