தூத்துக்குடி துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம்
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்வில் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப் படங்களுக்கு .கனிமொழி எம்.பி. மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் தஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தனியார் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி அஞ்சலி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வி.சி.க அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாரிச்செல்வம், மதிமுக முருகபூபதி, சமக மாலைசூடி அற்புதராஜ், ஸ்டெர்லைட் எதிர்ப்புமக்கள் இயக்கம் பேராசிரியை பாத்திமா பாபு, முகைதீன் காதர், தயாலிங்கம், செல்வின், பால் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.