தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் புகார்

 தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் புகார்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று காலையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவர் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி தொடங்கி நடைபெற்றது.

பேரணியில் தொண்டர்கள் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.. பேரணி கவர்னர் மாளிகையை சென்றடைந்ததும் எடப்பாடி பழனிசாமி  அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் சட்டம்-ஒழுங்கு, போலி மது, விஷ சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரிகை விடப்பட்டிருந்தது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *