கோவில்பட்டியில் ஆக்கிபோட்டி :பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு கனரா பேங்க் அணி அபார வெற்றி

 கோவில்பட்டியில் ஆக்கிபோட்டி :பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு கனரா பேங்க் அணி அபார வெற்றி

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிபோட்டி 18ந் தேதி தொடங்கியது.

மாலையில் நடந்த தொடக்க விழாவை தொடர்ந்து 3 லீக் போட்டிகள் நடந்தன,.2-வது நாளான நேற்று 3 போட்டிகள் நடந்தன,

மாலை 5.15 மணிக்கு சவுத் சென்ட்ரல் ரெயில்வே, செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தது. இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில் ஆடினார்கள்.

செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் அணிக்கு ஆரம்பத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக மாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் பெங்களூரு கனரா பேங்க் அணி வீரர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செகந்திராபாத் அணியினர் கடுமையாக போராடினார்கள். பதில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பெல்லாம் கை நழுவிப்போனது. ஆட்ட இடைவேளை வரை அவர்களால் பதில் கோல் போட முடியாததால் பெங்களூரு அணி ` 1 கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது.

இடைவேளைக்கு பிறகான ஆட்டத்தின்போது செகந்திராபாத் அணிக்கு ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது.இதை பயன்படுத்தி ஒரு கோல் அடித்து சமநிலையை அடைந்தனர். இரு அணியினரும் தலா ஒரு கோல் என்ற நிலையில் ஆட்டம் சூடு பிடித்தது.

ஆட்டம் டிரா வில் முடிந்து விடமோ என்று நினைக்கும்போது பெனால்டிக் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு கனரா பேங்க் அணியினர் ஒரு கோல் அடித்தனர். சிறிது நேரத்தில் இன்னொரு கோல் விழுந்தது. இதனால் கனரா பேங்க் அணியினரின் கை ஓங்கியது.

இருந்தாலும் செகந்திராபாத் அணியினர் பெனால்டிக் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தனர். அதன்பிறகு கோல் எதவும் விழவில்லை. ஆட்ட இறுதியில் இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா பேங்க் அணி வெற்றி பெற்றது.

2 வது ஆட்டம்

இரண்டாவது  ஆட்டத்தில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு  அணியும்,  தமிழ்நாடு  போலீஸ், சென்னை அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 18-வது நிமிடத்தில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் ஆர்மான் குரேஷி பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.   20-வது நிமிடத்தில் தமிழ்நாடு  போலீஸ், சென்னை அணி வீரர் மதன் பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் பதிலுக்கு ஒரு கோல் போட்டார். 

இதை தொடர்ந்து டெல்லி அணியினர் வரிசையாக கோல் போட தொடங்கினார்கள்.  24-வது நிமிடத்தில் டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வீரர் தல்விந்தர் சிங்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.  27-வது நிமிடத்தில் அதே அணி வீரர் சுமீத் குமார்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 29-வது நிமிடத்தில் மீண்டும் அதே   அணி வீரர் ஆர்மான் குரேஷி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

38-வது நிமிடத்தில் சுமீத் குமார்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 44-வது நிமிடத்தில் மந்தீப் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 58-வது நிமிடத்தில் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  எதிர் அணியினரால் ஒரு கோலுக்கு ,மேல் போடமுடியவில்லை. இறுதியில் இதில் 7:1 என்ற கோல் கணக்கில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப் பெற்றது. சிறந்த ஆட்டக்காரர் :விருதை   ராஜுட் சிங்  பெற்றார்.,

3-வது ஆட்டம்

3-வது  ஆட்டத்தில் டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியுடன் சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே ஹுப்ளி அணி மோதியது..

26-வது நிமிடத்தில் டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் பர்விந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். மீண்டும் 41-வது நிமிடத்தில் அதே அணி வீரர் அபாரன் சுதேவ்  பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

53-வது நிமிடத்தில் சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே, ஹுப்ளி அணி வீரர் ராகுல் லோகாண்த்  பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். அதன்பிறகு யாரும் கோல் போடவில்லை. இதனால்  டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்., சிறந்த ஆட்டக்காரர் விருது  டெல்லி வீரர்  பர்விந்தர் சிங்க்கு கிடைத்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *