நிதி அமைச்சர் கூறிய ரூ,30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
![நிதி அமைச்சர் கூறிய ரூ,30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி](https://tn96news.com/wp-content/uploads/2023/04/download-8.jpg)
சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-.
கேள்வி : ஐ.டி. ரெய்டுக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்துகிறார்களே?
பதில்: 2 வருடத்திற்குள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை.உடன் இருக்கின்ற நிதி அமைச்சர் சொல்கிறார்.அந்த குரல் அவருடையது என்பது ஊரறிந்த உண்மை.இது நாட்டுக்கே தெரியும்.இந்த ஆடியோ எடப்பாடியாரும் போட்டு காண்பித்தார். 30 ஆயிரம் கோடி என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதனை முதலில் விசாரிக்கவேண்டும்.30 ஆயிரம் கோடி இருந்தால் தமிழகத்தில் எவ்வளவே ஆக்கபூர்வமான பணிகளை செய்யலாம்.மின்சார வசதி,சாலை வசதி,அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது இப்படி பல்வேறு பணிகளை செய்யலாம்.
அரசு கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாய் ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு சென்றுள்ளது.இதனை மத்திய அரசு சும்மா விடக்கூடாது.இதனை கவனத்தில் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.நிதி அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரின் வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு உதயநிதி,சபரீசனை அமலாக்கத்துறை தங்களுடைய விசாரணை வளையத்திற்குள் எடுத்து விசாரிக்கவேண்டும்.விசாரித்து உண்மையை வரவைக்கவேண்டும்.அந்த 30 ஆயிரம் கோடி அரசின் கருவூலத்திற்கு வந்தால் மக்களுடைய பல கஷ்டங்கள் தீரும். மின்சார கட்டணத்தை ஏற்றவேண்டியதில்லை.பால் விலையை உயர்த்த வேண்டியதில்லை. வரி உயர்வு இல்லாமல் மக்களுக்கு ஒரு நல்ல நிலையை உருவாக்க முடியும். 30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்யவேண்டிய அளவில் நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவரை பிடிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற நடவடிக்கை இதுவரை இல்லை.
ஆனால் வருமான வரித்துறையை பொறுத்தவரையில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். முதல் நடவடிக்கையாக இதனை வைத்துக்கொள்ளலாம்.மத்திய அரசு வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டுகின்ற வேலையை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள முடியும். ஜி என்றாலே தி.மு.க.வுக்கு ஒத்துபோகும் போலவுள்ளது. 2 -ஜி. ஜி ஸ்கொயர் .2 ஜி யால் ஆட்சியே கவிழ்ந்தது. அதுபோல ஜி ஸ்கொயர் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வீட்டுக்கு சீக்கிரம் போகும் அளவுக்கு ஒரு நிலைமை நிச்சயமாக உருவாகும். தி.மு.க.வுக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது. சனி பிடித்துள்ளது.விரையில் இந்த ஆட்சி தொலைவதற்குண்டான நேரம்தான் இது. .மத்திய அரசு ரெய்டு செய்துவருகிறது.நல்ல விஷயம்தான் இது.மத்திய அரசை பொறுத்தவரையில் இது தொடரவேண்டும்.அடுத்து இந்த மூன்றுபேரை விசாரணை வளையத்தில் எடுக்கவேண்டும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனால்தானே 50 இடங்களில் ரெய்டு செய்துள்ளார்கள். 30 ஆயிரம் கோடியை குறுகிய காலத்தில் சேர்த்த உதயநிதி,சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பேசியது குறித்தும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
கேள்வி :- நிதி அமைச்சர் இது என்றுடைய குரல் இல்லை என்று தெரிவித்துள்ளாரே
பதில் :- ஊருக்கே தெரியும் அவரின் குரல். நான் சொன்னேன் என்று ஒத்துக்கொண்டா செல்வார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிப்போம்.கண்டிப்பாக நாங்கள் இதனை விடப்போவதில்லை. அவர்கள் குடும்பத்திற்கு வருவாய் பெருகவேண்டும் என்று செயல்படுகிறார்கள். பில்கேட்ஸ்.எலன் மார்க்ஸ் இவர்களுடன் போட்டி போடவேண்டும் என்பதுதான் இவர்களின் லட்சியமாக உள்ளது.இந்த லட்சியத்தை நிறைவேற்ற விஞ்ஞான பூர்வமாக பல்வேறு பணிகளை செய்கிறார்கள்.
தேர்தலுக்கு வருதற்கு முன்னர் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அதனை மூடவேண்டியதுதானே. மூடவில்லை. அம்மாவை பொறுத்தவரை படிப்படியாக குறைப்போம் என்றார். 500 கடை ,500 கடை என்று குறைத்தோம். நீங்கள் ஒரேயடியாக மூடிவிடுவோம் என்று சொன்னீர்கள்.இப்போது என்ன ஆனது.8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு விற்பனை செய்தவர்கள் சான்றிதழ். சரக்கு விற்பனை செய்யாதவர்களுக்கு மெமோதருகிறார்கள்..
டாஸ்மார்க் பாரை பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் சில தடைகள் உள்ளது.அதனால் பார் நடக்காமல் இல்லை.சட்ட விரோதமாக பார் நடந்துவருகிறது.அதிமுக ஆட்சியில் ஒன்றரை சதவீதம் பார் நடத்திவந்தவர்கள் டிடி எடுத்து அரசுக்கு அனுப்புவார்கள்.இப்போது அந்த ஒன்றரை சதவீதம் இல்லாமல் இரண்டரை சதவீதம் டிடி எடுக்காமல் பணமாக சாராய அமைச்சருக்கு செல்கிறது. இது போல மாதம் 40 கோடி போகிறது.அரசுக்கு வரவேண்டிய பணம் இது. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மூடு மூடு டாஸ்மார்க்கை மூடு என்று வீட்டுக்கு முன்னர் பதாகை வைத்து போராடினார்கள். ஆனால் இப்போது சாராயம் ஆறாக ஓடுகிறது. இது தற்போது சரக்கு மாநிலமாக மாறிவிட்டது.இப்போது திருமண மண்டபத்திலும்,விளையாட்டு திடலிலும் மதுபானத்தை பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. திருமண மண்டபத்தில் மதுபானம் வந்தால் கலாசாரம் என்ன ஆகும். விளையாட்டு திடலில் மதுபானம் தேவையா.?
.தமிழகத்தில் குடிக்க கற்றுகொடுத்ததே திமுகதான்..கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்திலே சாராயத்தை கொண்டுவருகிறார்.ராஜாஜி கெஞ்சு கிறார்.இதனை கேட்காமல் கொண்டுவந்து இளைஞர் சமூதாயத்தை சீரழித்தது தி.மு.க..அன்றைக்கு மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியிருந்தால் இன்று இந்த நிலைமை இருந்திருக்காது.இன்று அவரின் வாரிசுகள் எங்கும் சரக்கு,எதிலும் சரக்கு என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.இவர்களை மக்கள் எப்படி திட்டுகிறார்கள் என்பது தெரியாதா.. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றிவிட்டார்கள்.அவர்களின் கூட்டணி கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டமன்றம் முடியும் நேரத்தில் இந்த சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றுகிறார்கள் என்றால் கொத்தடிமை அரசு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.இந்த விவகாரத்தை அ.தி.மு.க. கண்டிப்பாக விடாது.வாய் மூடி மவுனியாக இருந்த கம்யூனிஸ்டு கட்சிகள்,விடுதலை சிறுத்தைகள் தற்போதுதான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
கேள்வி :அமைச்சர் செய்தில்பாலாஜி, திருமண மண்டபத்தில் மதுபானம் என்பதை மறுத்துள்ளாரே
பதில் : பத்திரிக்கையிலும் ஊடகத்திலும் செய்தி வந்தவுடன் அந்தர்பல்டி அடிக்கிறார். இதனை சொல்வதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லை.அவர் குறிப்பிடுவதுபோல நடைமுறை எங்கள் ஆட்சியில் இருந்ததா.கோவா கலாசாரத்துடன் தமிழக கலாசாரத்தை ஒப்பிட முடியுமா.
வரும் தேர்தலில் இவர்கள் செய்யும் செயல் கண்டிப்பாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)