• November 14, 2024

அ. தி. மு. க. வை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்; பா.ஜ.க.வுக்கு டி. ஜெயக்குமார் எச்சரிக்கை

 அ. தி. மு. க. வை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்; பா.ஜ.க.வுக்கு டி. ஜெயக்குமார் எச்சரிக்கை

அ. தி. மு. க.  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி  கையொப்பமிட்ட  கழக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டத்தை வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார்.

திமுக மீது மக்கள் எதிர்ப்பு அலை நிலவி  வருகிறது. அது விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். நடைபெறவுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும். திமுக நிச்சயம் மண்ணைக் கவ்வும்.
கழகத்தின் பொதுச்செயலாளர் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு  கழக தலைமையிடம் இருந்து வரும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது அடியோடு  கெட்டுவிட்டது. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் கொலை கொள்ளை பற்றிய செய்திகள் தான் வருகிறது.செய்தித்தாள்களில் பாதி செய்திகள் கொலை கொள்ளை பற்றிய செய்திகள் தான் வருகின்றன. தமிழகத்தில் ரவுடிகள் சாம்ராஜ்யம் தான் நடக்கிறது தமிழகத்தில் கட்சியும் ஸ்டாலினிடமில்லை ஆட்சியும் ஸ்டாலினிடம் இல்லை.
திமுகவில் கோஷ்டி பூசல் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.அது திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா வீட்டின் மீதான தாக்குதல் ஓர் எடுத்துக்காட்டு. தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியனின் நிலை என்னவாக இருக்கும் . குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல தமிழகம் ஸ்டாலின் கையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. 
நெல்லை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே மேயரை எதிர்க்கும் நிலை நிலவுகிறது. கத்திரிக்கோலை கையில் வைத்துக்கொண்டு ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் திட்டங்களை தொடங்கி வைக்கிறோம் என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள் .
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தன்னிடம் இருப்பதாக கூறிய உதயநிதி, தற்போது உரிமைகள் பாதிக்கும்பொழுது குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உரிமைகள் பறிபோனபொழுது திமுக இதுவரை எந்த உரிமைக்கும் குரலும் கொடுத்ததில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் பலமுறை கூட்டணியில் இருந்த திமுக, தமிழர்களின் உரிமைகள் எதை பெற்று தந்துள்ளது. குறிப்பாக கல்வி உரிமையை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றிய போது, திமுக ஏன் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ் தமிழ் என்று சொல்லி வரும் திமுக நடைபெற்ற முடிந்த 12 ஆம் வகுப்பு மொழி பாடத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கு என்ன காரணம் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

கழகத்தை விமர்சித்த தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல் எடுத்துவிட்டு தற்போது அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டது குறித்த கேள்விக்கு குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறிய அவர் அ. தி. மு. க. வை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும் என்று பதில் அளித்தார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *