மந்தித்தோப்பு ரோட்டை அகலப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம்
கோவில்பட்டி நகரை ஒட்டிய பகுதி மந்திதோப்பு. வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு நிறைய வீடுகள் வணிக நிறுவனங்கள் பெருகி விட்டன. அனால் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்பது இந்த பகுதி மக்களின் குற்றசாட்டு.
எட்டயபுரம் சாலையில் இருந்து மந்திதோப்பு பசெல்ல நுழையும் பகுதி மிகவும் குறுகலாக இருக்கும். இதனால் நாள்தோறும் வாகன நெருக்கடி ஏற்படுவது வாடிக்கை. இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால் வாகனபோக்குவரத்து சீராகும்.
எனவே இந்த மந்தித்தோப்பு ரோட்டை அகலப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பில் சங்கு ஊதும் போராட்டம் மந்தித்தோப்பு ரோடு தேவர் படிப்பகம் அருகில் இன்று காலை நடைபெற்றது,.
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார், நகரச் செயலாளர் சரோஜா, நக உதவி செயலாளர் முனியசாமி,மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், செல்லையா, சுரேஷ்குமார்,வக்கீல் ரஞ்சனி கண்ணம்மா, லெனின் குமார்,நகர குழு உறுப்பினர்கள் குருசாமி, சண்முகவேல், விஜயலட்சுமி,தாலுகாகுழு உறுப்பினர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.