கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தின் டிஜிட்டல் நூலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
மறைந்த கரிசல் எழுத்தாளர் சாகித்ய ஆகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் (கி.ரா.)நினைவாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நினைவரங்கம் ஒன்றை தமிழக அரசு அமைத்து உள்ளது.. அதனுள் கி.ரா.பயன்படுத்திய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் நூலகம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த நினைவரங்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு திற்நது வைத்தார்.
இன்று கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கி.ரா நினைவரங்கத்தை சுற்றி பார்த்தனர். அப்போது டிஜிட்டல் நூலகத்தையும், நூல்களையும், கி.ரா பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டனர்.
பின்பு வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தார்.
நினைவரங்க நூலகர் பொன் மீனா மாணவர்களுக்கு டிஜிட்டல் நூலகம் குறித்து விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அருள் காந்தராஜ்,ராதாகிருஷ்ணன், ஜெப அகிலா,நித்யாஸ்ரீ, உண்ணாமலைத்தாய், சங்கரேஸ்வரி,ஆகாஷ்,சாந்தினி உள்பட பள்ளி மாணவ-மாணவிகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.