கோவில்பட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோர் ஆக்கி போட்டி: பாண்டவர்மங்கலம் அணி `சாம்பியன்’
கிரீடா பாரதி தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 12 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 2 நாட்களாக நடைபெற்றது இப்போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன
இலுப்பையூரணி ஆக்கி கிளப் , பாரதி ஆக்கி கிளப், பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப், கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் ஆகிய நான்கு அணிகள் முதலில் விளையாடின புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் பாரதி ஆக்கி கிளப் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் இலுப்பையூரணி ஆக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்
பின்னர் நடந்த இறுதிப் போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியும் ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம் அணியும் சந்தித்தன. இரு அணியும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் அனல் பறந்தது. பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்,.
இரு அணியினரும் கோல் அடிக்க விடாமல் தடுத்து ஆடினார்கள். இறுதியில் வெற்றி பாண்டவர் மங்கலம் ஆக்கி கிளப் அணியை தேடி சென்றது. ஆட்ட முடிய இருந்த கடைசி நிமிடத்தில் அந்த அணி வீரர் விக்னேஸ்வரன் பீல்டு கோல் அடித்து வெற்றிக்கனியை பறித்தார். ராஜீவ் காந்தி அணியினரை 1-0 என்று கோல் கணக்கில் தோற்கடித்து பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பின்னர் நடைபெற்ற ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ரா சண்முக பாரதி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது கிரீடா பாரதியின் துணைத் தலைவர் காளிமுத்து பாண்டி ராஜா வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு விருந்தினர்களாக கிரீடபாரதியின் மாநில பொறுப்பாளர்கள் சந்திரன் மற்றும் பூபதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள் கிரீடா பாரதியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கரிகாலன் அனைவரையும் வரவேற்றார்
போட்டியின் நடுவர்களாக இருந்த காளிதாஸ் ,அஸ்வின், கார்த்திக் ராஜா, வேல்முருகன், அருண்குமார் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது விழாவில் லக்னோவில் நடைபெற்ற கே.டி. சிங் பாபு அகில இந்திய 14 வயதுக்குட்பட்டார் ஆக்கி போட்டியில் பங்கு பெற்ற கோவில்பட்டி வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது
விழாவின் இறுதியில் ஸ்ரீவைகுண்டம் உடற்கல்வி ஆசிரியர் முருகன் நன்றி கூறினார் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முகேஷ் குமார் ,பிரேம் குமார், ஜெகதீஸ்வரன், கார்த்திக் ராஜா, கவின், ஆகியோர் செய்திருந்தனர்