கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.ராமசாமி நினைவு தினம்; சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-மாணவர் மாரத்தான் போட்டி
கோவில்பட்டி கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.ராமசாமியின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, செண்பகவல்லி அம்மன் கோவில் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் 17 வயதிற்குட்பட்ட மானவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திடலில் இருந்து தொடங்கி அண்ணா பேருந்து நிலையம், மணியாச்சி பைபாஸ் வழியாக கே.ஆர்.கல்லூரியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. இம் மாரத்தான் .போட்டியை நாலாட்டின்புதூர் காவல் உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வானரமுட்டி, குமரெட்டியாபுரம் மற்றும் கோவில்பட்டி நகர முக்கிய இடங்களில் நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாமும், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி கலையரங்கத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வி.எ.ஷண்மதி,செல்வன்.எ.நிதிஷ்ராம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கே.ஆர்.மணிமண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பின்னர் நேஷனல் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கே.ராமசாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, கல்லூரியின் முன்னாள் (சி.எஸ்.சி. 1984-88) மாணவரும் மற்றும் அமெரிக்க அமடிஸ் டெக்னாலஜிஸ் இங்க்., நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மதுகுமார், ‘தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இணையவழி வாயிலாக நிறுவனரின் 4ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
முன்னதாக நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டது..இந்நிகழ்வுகளை கல்லூரி இணையதளம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படிருந்தது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் தலைமையில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.