கோவில்பட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி தொடக்கம்; முதல் ஆட்டத்தில் 11 கோல்கள் அடித்து ராஜீவ்காந்தி விளையாட்டு கழகம் அணி அபாரம்
கிரீடா பாரதியின் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்றும் நாளையும் (11.3.23,12.3.23) போட்டிகள் நடத்துகின்றன.
இப் போட்டியில் இலுப்பையூரணி ஆக்கி அணி, பாரதி ஆக்கி அணி, பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி, ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் என நான்கு அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
இப் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது.இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணி 11-0 என்ற கணக்கில் இலுப்பையூரணி ஆக்கி அணியை தோற்கடித்தனர். செல்வமுகில் 2,ராபர்ட் 2,ஜெய் ஆகாஷ் 3, வேல்முருகன் 2,மது பிரவின் 2 கோல்கள் வீதம் மொத்தம் 11 கோல் அடித்தனர்.
இரண்டாவது போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி 2-1என்ற கோல் கணக்கில் தெற்கு திட்டங்களும் பாரதி ஆக்கி அணியை வெற்றி பெற்றது.
இதில் பாரதி அணியின் சார்பாக அனு ஶ்ரீ 1 கோலும். பாண்டவர்மங்கலம் அணி சார்பாக விக்கி 1 ,கார்த்திக் 1 கோலும் அடித்தார்கள்.
மாலையில் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் பாரதி ஆக்கி கிளப் அணியும் ராஜீவ் காந்தி ஆக்கி கழகம் அணியும் மோதின.
இப் போட்டியில் 4 -1என்ற கோல்கணக்கில் ராஜீவ் காந்தி ஆக்கி கிளப் அணி வெற்றி பெற்றது.
.இதில் பாரதி அணியின் சார்பாக அனுஶ்ரீ 1 கோலும்.ராஜீவ் காந்தி அணியின் சார்பாக மதுபிரவீன் 3,ராபர்ட் 1 கோலும் அடித்தார்கள்.
4 வது லீக் போட்டியில் பாண்டவர்மங்கலம் அணியும் இலுப்பையூரணி அணியும் மோதின.இப்போட்டியில் 12 − 0 என்ற கோல்கணக்கில் பாண்டவர்மங்கலம் அணி வெற்றி பெற்றது.கார்த்திக் 5 கவுசிக் 5,கிஷோர் 2 கோல்களும் போட்டனர்
போட்டிகளின் நடுவர்களாக கார்த்திக் ராஜா அஸ்வின் காளிதாஸ் வேல்முருகன் ஆகியோர் செயல்பட்டனர்
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட கிரீடா பாரதியின் தலைவர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தூத்துக்குடி மாவட்ட கிரீடபாரதியின் செயலாளர் முனைவர் கரிகாலன் ஆகியோர் செய்துள்ளனர்