போதைப்பொருள் ஒழிப்பில் அரசுக்கு அக்கறை கிடையாது ;டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை ராயபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
போதைப் பொருட்கள் தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.போதைப் பொருட்களின் தாக்கம் கடுமையாகப் பாதிக்கும் நிலையிலே அதிலிருந்து மீள வேண்டும்.அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரு உயரிய எண்ணத்தில் அடிப்படையில் ஒரு சமுதாய நோக்கோடு இந்த பேரணி தொடங்கிவைக்கப்பட்டது.
மாணவர்கள் குறிப்பாக நம்முடைய காசிமேடு பகுதியில் அதேபோல கடற்கரை பகுதியில் எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அகில உலக ரீதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 28 கோடி பேர். உலகம் முழுவதும் மனிதக் குலத்திற்குச் சவால் விடுகின்ற செய்தியாக உள்ளது
.ஒரு அரசைப் பொறுத்தவரை முழுமையாக எல்லா வகையிலும் காவல்துறையை வைத்து அதிலும் குறிப்பாக நுண்ணறிவு பிரிவின் மூலமாக பல்வேறு தகவல்களை பெற்று இதனைக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதன் மூலமாக தான் இதனை முற்றிலும் ஒழிக்க முடியும்.
போதைப் பொருட்களில் 13 வகையான போதைப் பொருட்கள் உள்ளது.அரசு இதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்றாலும்கூட ஏதோ கடமைக்காக விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதைவிட உணர்வுப்பூர்வமாக,உளப் பூர்வமாக நடத்தவேண்டும்.போதைப் பொருட்கள் குறித்து காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு உள்ளது.கண்டிப்பாகக் காவல் நிலையத்தில் இது குறித்துத் தெரியும். யார் யார் எந்த போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். முழுமையான அளவுக்கு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு,முழு வீச்சிலிருந்தால் இதனை அறவே தடுத்துவிடலாம். எனவே இதற்கு முழுமையாகப் பொதுமக்களும் ஒத்துழைப்பை வழங்குவார்கள். இந்த விவகாரத்தில் இளைய சமூகம்தான் மிகவும் பாதிக்கப்படுகிறது. 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கின்ற இளைய சமூகத்தினர்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.பெற்றோர்கள் போதைப் பொருட்களை ஒழிக்கவேண்டும் என்று 100 சதவீத அளவிற்கு உறுதியோடு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சர்வசாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும் என்ற நிலையை மாற்றவேண்டும்.
காவல்துறை முழுமையாக ஆய்வு செய்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனையை பெற்றுதரவேண்டும். எங்கள் ஆட்சிக் காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்த காரணத்தினால் முழுமையான அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.ஆனால் இப்போது ஆளும் விடியா அரசுக்கு இது குறித்து கவலையில்லை. நாடு எக்கேடு கெட்டால் என்ன,யார் போதைப் பொருள் விற்றால் என்ன என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொதுவாக ஆட்சியிலிருந்துகொண்டு வருமானத்தைக் கொண்டுபோகவேண்டும் என்பதுதான் அவர்களின் கவலை,இதன் மூலம் கட்சிக்கும்,குடும்பத்திற்கும் வருமானத்தைப் பெருக்கவேண்டும். இப்படிதான் அவர்களின் செயல்பாடு இருக்கின்றதே தவிர இதனை ஒழிக்கவேண்டும் என்று இந்த அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது கிடையாது.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கும் அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி :- என்எல்சி விவகாரத்தில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.இது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளாரே?
பதில் : -இந்த விடியா திமுக அரசில் ஒரு போராட்டம்கூட ஒரு ஜனநாயக அளவிலே நடத்த அனுமதி கிடையாது.போராட்டம் செய்தால் இம் என்றால் சிறைவாசம்,ஏன் என்றால் வனவாசம்.உடனே அவர்களைச் சிறையில் அடைப்பது. சமூக ஊடகங்களில் இந்த அரசைப்பற்றி கருத்தைத் தெரிவித்தால் உடனே அவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்புவது.கள்ள ஓட்டு போடுவர்களை பிடித்துகொடுத்தால்,பிடித்து கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.கள்ள ஒட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்பாக என் மீது வழக்குப்போட்டார்கள். எங்கள் 10 ஆண்டுக்கால ஆட்சியில் நில அபகரிப்பு என்பது கிடையாது. 10 வரும் எந்த நில எடுப்பும் செய்யவில்லை.நாங்கள் எப்படி ஆட்சி நடத்தினோம். மத்திய அரசோடு ஒரு நல்லுறவு இருந்தது. மத்தியில் நல்லுறவு இருந்தாலும்கூட இந்த விவகாரத்தில் விவசாயிகள்,மக்களின் பக்கம் நாங்கள் சாய்ந்தோம். இன்றைக்கும் எங்களுடைய ஆதரவு என்பது பொதுமக்களுக்கும்,விவசாயிகளுக்கும்தான்,. விவசாயிகள் பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.இதுபோன்ற நிலையில் நிலத்தை ஏன் பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்றால் ஏன் நிலத்தை எடுக்கிறார்கள்.இதுதான் கேள்வியே. நாங்கள் 10 வருடம் நிலத்தை எடுக்கவில்லையே .நீங்கள் ஏன் எடுக்கிறீர்கள். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை நாங்கள் எதிர்ப்போம் என்றால் அது மக்கள் விரோத போக்கு இல்லையா நாங்க990ள் விவசாயிகளோடு துணை நிற்போம்,மக்களோடு துணை நிற்போம் என்று சொல்வதற்கு இந்த அரசுக்கு வலிமை உள்ளதா. அந்த தைரியம் உள்ளதா.மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் அவர்களுக்கு கிடையாது. நாங்கள் 10 வருடம் நிலத்தை எடுத்தோமா.அப்படி என்றால் கொத்தடிமை யாரு. திமுகதான் கொத்தடிமை.மத்திய அரசுக்குத் துணை போகின்ற வகையிலே,மத்திய அரசின் நிறுவனமாக இருக்கின்ற என்எல்சிக்கு அந்த நில எடுப்பிற்குத் துணை போகின்றது என்றால் நன்றாகத் தெரிகிறது திமுகதான் கொத்தடிமை வேலையைச் செய்துவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கழகம்தான் எதிர்க் கட்சியாக உள்ளது. ஒரு நாள் கடையடைப்பு நடத்திய காரணத்தினால் அவர்கள் எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடாது. சொத்துவரிக்கு யார் ஆர்ப்பாட்டம் செய்தது, மின்சாரத்திற்காக யார் ஆட்பாட்டம் செய்தார்கள்.நாங்கள்தானே தெரியாமல் எப்படி அரசாணை எப்படி வர முடியும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
: