கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா
![கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா](https://tn96news.com/wp-content/uploads/2023/01/e6803a47-632f-49a1-8c2f-ee139659d767-850x560.jpg)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவணநாத சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹீத், பூர்ணாஹுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியில் இருந்து 1௦.20 மணிக்குள் சாலை கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இரவு 7 .30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் அலங்கார ஆராதனையும் நாதஸ்வர வித்வான் எஸ்.என்.நடராஜன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)