கோவில்பட்டி மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
கோவில்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில், மெயின் ரோட்டில் உள்ளது. நீர்வரத்து ஓடையின் மறு பக்கத்தில் இக்கோவில் இருக்கிறது, சமீபத்தில் இக்கோவிலுக்கு செல்லும் நடை மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது,
தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட்டனர், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது பற்றி எடுத்து கூறினார்கள்/ இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நீர்வரத்து ஓடையில் தற்காலிக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செல்வ விநாயகர், அலமேலு மங்கா, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் நிறுவப்பட்டு மகா கும்பாபிஷேகம இன்று 27-ந் தேதி நடைபெற்றது.
காலை 4 மணிக்கு மேல் செல்வா விநாயகர் கோவிலில் நான்காம்கால யாக பூஜை நடந்தது. 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் செல்வா விநாயகர் மற்றும் அலமேலு மங்கா, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் விகேனஷ்வர பூஜை, புண்யாகவசனம், நான்காம்கால யாக வேள்வி, பீம்சுத்தி, நாடி சந்தனம், சபர் ஷாஹூதி,நிரவியாஹூதி, மகா பூர்ணாஹுதி, யாத்ராதானம் கும்ப எழுந்தருளல் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் விமான கோபுரம் மூலஸ்தானம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவில் முன்பு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
கும்பாபிசேக விழாவில் வணிக வைசிய சங்க தலைவர் எம்.வெங்கடேஷ், தமிழ்நாடு வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பி.எம்.பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்,.