கோவில்பட்டியில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு
![கோவில்பட்டியில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு](https://tn96news.com/wp-content/uploads/2023/01/IMG-20230101-WA0203-850x560.jpg)
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் தேசிய புத்தக கண்காட்சியில் திருக்குறள் புத்தகத்தோடு புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குறள் நெறி வழி நடக்கவும்,வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் புத்தகம் புத்தாண்டு பரிசாக வழங்கப்பட்டது.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/01/Tn-96-2-1024x819.jpg)
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமைதாங்கினார்..கோவில்பட்டி உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், ரோட்டரி மாவட்ட தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக திருக்குறள் புத்தகத்தை ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் விநாயகா ரமேஷ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வீராச்சாமி, பூல்பாண்டி,முத்து முருகன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முடிவில் புத்தக கண்காட்சி பொறுப்பாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)