இலுப்பையூரணியில் புதிய சுகாதார நிலையம் திறப்பு
கோவில்பட்டி இலுபையூரணியில் ரூ.27 லட்சம் செலவில் புதிதாக சுகாதார நிலையம் நிறுவப்பட்டுள்ளது, இதன் திறப்பு விழா நடைபெற்றது, பஞ்சாயத்து தலைவர் செல்விசந்தனம் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கீழஈரால் வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணாராம், கார்த்தி அஜய், சுகாதார செவிலியர்கள் பார்வதி, சரணிகா வார்டு உறுப்பினர்கள் ரதிவேல் ரமணன், கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்,.