மழையின்மையால் மக்காசோளம் மகசூல் பாதிப்பு ; விவசாயிகள் முற்றுகை போராட்டம்

 மழையின்மையால் மக்காசோளம் மகசூல் பாதிப்பு ; விவசாயிகள் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. சாரல் மழை பயிர் விளைச்சலுக்கு போதுமானதாக இல்லை.
இதனால் இப்பகுதிகளில் பயிரிப்பாட்டுள்ள மக்காச்சோளம் பருவமழை குறைவினாலும், படைப்புழு தாக்கத்தினாலும் மணிபிடிக்காமல் மக்காச்சோளம் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, உளுந்து, பாசி போன்ற பயறு வகை பயிர்களும் மழையின்மையால் பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் மஞ்சள் நோய் தாக்கியதோடு, நிலத்தில் ஈரம் இல்லாததால் பயிர்கள் காய்ந்துவிட்டு மகசூல் பாதிக்கப்பட்டுவிட்டது.

எனவே, மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்ததோடு, படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சேதமடைந்த பயிர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மனு அளித்தனர்.

இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில உதவி செயலர் நல்லையா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் லெனின்குமார், மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, தாலுகா செயலர்கள் ரவீந்திரன் (எட்டயபுரம்), சிவராமன் (கோவில்பட்டி) ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர் பாலமுருகன், கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *