புது அப்பனேரி வாக்குசாவடி மையத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம்
கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:;-
பாகம் எண் 178க்கு உட்பட்ட சுபா நகர் மற்றும் புது அப்பனேரி வாக்காளர்களுக்கு வணக்கம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியினை விரைவு படுத்தி முடித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
நமது சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைவான அளவில் இணைப்பு பணி நடைபெற்றுள்ளது இது மிகவும் வருந்தத்தக்கது. நாளை 17. 12. 2022 அன்று புது அப்பனேரி வாக்குச்சாவடி மையத்தில் ஆதார் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமினை பயன்படுத்தி ஆதார் இணைப்பினை செய்திட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது,