பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தகோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
![பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தகோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/b8634fcb-2f6e-4991-9b4f-1e60e16b6f5a.jpg)
தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெறவேண்டும், தன பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்த செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சாரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,
ஒவ்வொரு கல்வி மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, சாத்தான்குளம் ஆகிய கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடந்தது,
கோவில்பட்டி பழைய பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்,. மாவட்ட தலைவர் கலை உடையார், செயலாளர்கள் சிவக்குமார், கஜேந்திரபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, மாவட்ட தலைவர் வெள்ளைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மாவட்ட தலைவர் சீனி, பிரசாரத்தை தொடக்கி வைத்தார், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுசெயலாளர் ச,,மயில் சிறப்புரை ஆற்றினார், மாநில துணை தலைவர் குரூஸ் விக்பர்ட் நிறைவுரை ஆற்றினார்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)