Month: December 2024

தூத்துக்குடி

யானைப்பாகன் மனைவிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உதவி யானை மாவுத்தராக பணிபுரிந்தவர் உதயக்குமார். இவர்  கடந்த 18.11.2024 அன்று யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையொட்டி  உதயக்குமார் வாரிசுதாரரான மனைவி ரம்யாவுக்கு கோவிலில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை கனிமொழி எம்.பி,வழங்கினார். இந்த ஆணையை அமைச்சர்கள்  கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் ரம்யா இல்லத்திற்கு நேரில் சென்று கனிமொழி எம்.பி. வழங்கினார்.  […]

பொது தகவல்கள்

வருமானத்தை அள்ளி தரக்கூடிய `சவுக்கு’

நாம் சிறுவர்களாக இருந்த போது சவுக்கு செடியின் இலையை பிடுங்கி அதில் ஓரு கணுவை எடுத்து  மற்றொரு கணுக்குள் நுழைத்து விளையாடிஇருப்போம் அந்த செடி தான் சவுக்கு  இதுபள்ளிகளிலும் தோட்டங்களிலும் கல்லூரிகளில்  வரப்பு ஓரங்களில் வேலியாக நடப்பட்ட இந்த மரப்பயிர் தற்போது காகித ஆலைக்கு (PAPER MILL)  தேவையான முக்கிய முலப்பொருளாக வும் அதிக கலோரி வெப்பம் தரக்கூடிய எரிய பொருளாகவும் இந்த சவுக்கு பயன்படுகிறது. இது ஓரு அன்னிய நாட்டு மரம் ஆங்கிலேயேர்களால் நமது நாட்டு […]

சினிமா

மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் சூரியுடன் இணைந்து நடிக்கிறார்

பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் “ஆக்சன்” படம் மூலம் அறிமுகமானார். ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2’ ஆகிய படங்களில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இந்த நிலையில் இவர் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய […]

சினிமா

‘சூது கவ்வும் 2’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கு […]

ஆன்மிகம்

ஆன்மிக கேள்வி- பதில்கள்

கேள்வி:- கோலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா? கூறுங்கள். பதில்:- கோவிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான். கேள்வி:-வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது ? பதில்:-சுவாமிக்கு சாத்திய மாலைக்கு “நிர்மால்யம்’ என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். […]

பொது தகவல்கள்

சளி இருமல் தொண்டை எரிச்சல் குணமாக- இயற்கை வைத்தியம்…

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி? உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்:- தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; […]

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் ஆய்வு மையம்; கனிமொழி எம்.பி.திறந்து

கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் ஹியரிங் ஆப் லைப் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவை, , நாடாளுமன்ற குழுத் தலைவருர் கனிமொழி கருணாநிதி தொடக்கி வைத்தார். மேலும், பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் ஆய்வு மைய அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், தூத்துக்குடி மூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான […]

செய்திகள்

ராணுவ வீரரின் துப்பாக்கி, 25 தோட்டாக்கள் திருட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் பஞ்சாப்  மாநிலம்  அமிர்தசரஸில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு, அழகு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 குண்டுகளையும் அவர் வாங்கி […]

சினிமா

‘பிரமயுகம்’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் மோகன்லால் மகன் நடிக்கிறார்

நடிகர் மம்முட்டி நடிப்பில் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘பிரமயுகம்’. பிரபல மலையாள இயக்குனர் ராகுல் சதாசிவம் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் ஹாரர் திரில்லர் படத்தை ராகுல் சதாசிவம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் நடிகர் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி […]