யானைப்பாகன் மனைவிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை

 யானைப்பாகன் மனைவிக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உதவி யானை மாவுத்தராக பணிபுரிந்தவர் உதயக்குமார். இவர்  கடந்த 18.11.2024 அன்று யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்தார்.

இதையொட்டி  உதயக்குமார் வாரிசுதாரரான மனைவி ரம்யாவுக்கு கோவிலில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை கனிமொழி எம்.பி,வழங்கினார்.

இந்த ஆணையை அமைச்சர்கள்  கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் ரம்யா இல்லத்திற்கு நேரில் சென்று கனிமொழி எம்.பி. வழங்கினார். 

இந்நிகழ்வின்போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் , அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *