ஆன்மிக கேள்வி- பதில்கள்
![ஆன்மிக கேள்வி- பதில்கள்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/download.jpeg)
கேள்வி:- கோலில் சிலர் பரிகாரம் என்ற பெயரில் சுண்டல், வாழைப்பழம் போன்றவைகளைத் தருகிறார்கள். அவற்றை பிரசாதமாக வாங்குவதா அல்லது தோஷம் என மறுப்பதா? கூறுங்கள்.
பதில்:- கோவிலில் கொடுக்கும் பொருள் எதுவானாலும், கடவுளின் அருட்பிரசாதமே. தயக்கமில்லாமல் வாங்கி, பக்தியுணர்வுடன் சாப்பிடுங்கள். நவக்கிரகத்தை பரிகாரமாக வழிபட்டு சுண்டல், பழம் கொடுத்தாலும் அதுவும் பிரசாதம் தான்.
கேள்வி:-வீட்டில் சுவாமிக்கு சாத்திய பூமாலைகளை எங்கு சேர்ப்பது ?
பதில்:-சுவாமிக்கு சாத்திய மாலைக்கு “நிர்மால்யம்’ என்று பெயர். ஆறு,குளம், போன்ற நீர்நிலைகளில் சேர்க்கவேண்டும். பொதுவாக, கால்மிதி படாத இடத்தில் பூமாலைகளைச் சேர்ப்பது நல்லது.
கேள்வி:- அமாவாசை நாளில் சுபவிஷயம் கூடாது என்று சிலரும், சிலர் நிறைஅமாவாசை என்பதால் சுபம் நடத்தலாம் என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி?
பதில்:-முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே அமாவாசை உரியது. அமாவாசையில் சுபவிஷயம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பிரதமை நாட்களை விடுத்து துவிதியை திதியில் இருந்தே எடுத்துக் கொள்வர்.
கேள்வி:-ஈசானம், கன்னி மூலைகளில் எதில் பூஜை அறை அமைப்பது சிறப்பு?
பதில்:-வீட்டின் வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு(கன்னி) மூலைகள் இரண்டுமே தெய்வீகமானவையே. அவரவர் வசதிக்கேற்ப பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். கன்னிமூலையில் பணப்பெட்டியும் (பீரோ) வைக்கலாம்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)