Month: December 2024

ஆன்மிகம்

புனித பசு பற்றிய புராணக் கதை!

பசுவின் உடலில் லட்சுமிதேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும்.ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார். அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது […]

கோவில்பட்டி

காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ .வலியுறுத்தல்

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் உள்ள மானாவாரி நிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர் .இந்நிலையில் முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விங்கம்பட்டி கிராமத்துக்கு சென்றார்.பின்னர் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் விவசாயிகளுடன் டிராக்டரில் பயணம் செய்து , பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக செல்போனில் ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசி, விவரத்தை தெரியப்படுத்தினார். […]

செய்திகள்

சென்னை முடிச்சூரில் ஆம்னி பஸ்கள் நிறுத்துமிடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.தனியார் ஆம்னி பஸ்களும் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு நடைமுறை […]

செய்திகள்

பெருமளவில் கொடி நாள் நிதி வழங்க முதல்-அமைச்சர் வேண்டுகோள்

இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி நாள் நிதிக்கு நன்கொடை வழங்கினார். கொடி நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தம் பெற்றோரையும், தாம் பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை […]

செய்திகள்

டொனால்டு டிரம்ப்  வெற்றிக்கு 270 மில்லியன் டாலர் செலவழித்த எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கும் இவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. டொனால்டு டிரம்பிற்கு முதலில் இருந்தே தொழில் அதிபரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்ததோடு, பிரசாரத்தோடு அணிவகுத்து சென்றார்.இதனால் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் முக்கிய துறையான திறன் துறைக்கு  எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை தலைவராக நியமித்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் […]

செய்திகள்

விஜய் பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? திருமாவளவன் விளக்கம்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.  அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு… கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்’ என்று கூறியிருந்தார். த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் […]

செய்திகள்

மதுரை-சென்னை இடையே 20-ந் தேதி முதல் இரவு நேர விமான சேவை

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இரவு நேர விமான சேவையை எந்த விமான நிறுவனமும் பயன்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு, தனியார் விமான […]

செய்திகள்

`வழக்கு தொடருவோம் என்ற மிரட்டல்களுக்கெல்லாம் தமிழக பா.ஜ.க. பணிந்து செல்லாது’- அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது. தி.மு.க. அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, ‘வழக்கு தொடருவோம்’ என்று பூச்சாண்டி காட்டி மிரட்டும் […]