கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை) முன்பாக இன்று மாலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்., கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலரின் வருமானவரி பிடித்தம் செய்யபப்ட்ட பணம் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டதால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் திரண்டு வந்து இருந்தனர். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1 கோடி ரூபாய் அளவிலான இமாலய நிதி முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு […]
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்தியா சாம்சங் தொழிலாளர் சிஐடியூ சங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர் துறை பதிவு செய்ய வேண்டும்; தொழிற்சங்க உரிமையைப் பறிக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாத கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு கார்பரேட் ஆதரவு கொள்கையால், தொழிலாளர்மீது அடக்குமுறையை ஏவி வருகிறது. இதனை கண்டித்தும், சிஐடியூ சங்கத்தை பதிவு செய்து, […]
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும். துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.நோபல் பரிசு வென்ற அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினத்தன்று வழங்கப்படும். மருத்துவம்,இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் 10-ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சுந்தர் (வயது 21). தாயார் அமரா. 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். சுந்தர் ஏற்கனவே டிப்ளமோ முடித்து விட்டு, சென்னை மாநில கல்லுரியில் முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வருகிறார். தினமும் திருத்தணியில் இருந்து புறநகர் மின்சார ரெயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 4-ந் தேதி சுந்தர் கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்கள் சூரியா, தாவூத் ஆகியோருடன் வீட்டுக்கு […]
தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் இவருக்கு 38 வயதாகிறது. ரஃபேல் நடால் வரும் டேவிஸ் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஃபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான நிலையில், இன்று ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாகவும். […]
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வந்து இருக்கிறது வேட்டையன்….. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சி னையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்து அசத்தியுள்ளார்.இது சூப்பர் ஸ்டார் படமாக இருக்குமா… அல்லது ஞானவேல் படமாக இருக்குமா என நினைத்தால் ரஜினி படமாகவும் இருக்கிறது. ஞானவேல் படமாகவும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் ஆபிசர். […]
பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு இன்று தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடைய 2 நாள் சுற்றுப்பயணத்தில், 21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் அவர் விடுத்துள்ள செய்தியில்,கூறி இருப்பதாவது:- ”இந்த ஆண்டானது, கிழக்காசிய கொள்கையின் ஒரு தசாப்தமாக குறிக்கப்படுகிறது.ஆசியன் தலைவர்களுடன் இணைந்து, நம்முடைய விரிவான மூலோபாய நட்புறவின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வேன். நம்முடைய ஒத்துழைப்புக்கான வருங்கால வழிகாட்டுதலை வடிவமைக்கும் பணியும் […]
கோவில்பட்டி அருகே 9 நாட்களாக போலீஸ் நிலையத்துக்கு அலைந்த பெண்; கனிமொழி எம்.பி.முயற்சியால்
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அமலபுஷ்பம் என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அவருக்கு,வங்கி ஊழியர் கரண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வந்தனர். நாலாட்டின்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து அவர்கள் கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறிவந்த கரண்குமார் திடீரென மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, இதனால் அவர் பிரிந்து சென்று விட்டார், ‘இதை தொடர்ந்து அம்லபுஷபம், […]
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556-ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக விளையாடியது இங்கிலாந்து அணி. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 262 ரன்கள் குவித்து ஆட்டமிழ்ந்தார். பின்னர் களமிறங்கி தனது அதிரடியை தொடங்கிய ஹாரி புரூக் முச்சதம் விளாசினார். இதன்மூலம் ஹாரி புரூக் அதிவேகமாக முச்சதமடித்த பட்டியலில் 2-ம் இடம் […]