• February 7, 2025

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

 டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் இவருக்கு 38 வயதாகிறது. ரஃபேல் நடால் வரும் டேவிஸ் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரஃபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியான நிலையில், இன்று ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாகவும். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் தனது வாழ்நாளில் கடினமான ஆண்டுகள் என்றும் தன்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றும் நடால் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ரஃபேல் நடால் நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார். ரஃபேல் நடால் 63 டென்னிஸ் தொடர் வெற்றிகள், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம், அதிக நாட்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் என்ற பல்வேறு சாதனைகளை தக்கவைத்துள்ளார். கடந்த 2-வருடங்களாக காயம் காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *