இலக்கியத்திற்கான நோபல் பரிசு: தென்கொரிய பெண் கவிஞருக்கு அறிவிப்பு
![இலக்கியத்திற்கான நோபல் பரிசு: தென்கொரிய பெண் கவிஞருக்கு அறிவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/10/Han-Kang.jpg)
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும். துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.நோபல் பரிசு வென்ற அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினத்தன்று வழங்கப்படும்.
மருத்துவம்,இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அக்டோபர் 10-ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கவித்துவமான மொழியில் தீவிர உரைநடையில் வரலாற்று துயரையும்.,மனித வாழ்க்கையின் பலவீனங்களையும்., ஹான் காங் எழுதியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹான் காங் இளவயது முதலே இலக்கியம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.,காரணம் ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. 1993-ம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத ஆரம்பித்த ஹான் காங் சிறுகதைகள், நாவல்கள் என இதுவரை பல நூல்களை எழுதியுள்ளார். இவரின் நாவலான ‘தி வெஜிடேரியன்‘ புக்கர் பரிசை வென்றது. இதனை தமிழில் எழுத்தாளர் சமயவேல் ‘மரக்கறி‘ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)