பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது. இதனைத்தொடர்ந்து கைதின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பதியப்பட்டது. சவுக்கு சங்கர் மீது 2-வது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு […]
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (வயது 50 ) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் தபேதார் மாதவி செல்வார். மாதவி உதட்டில் கலர் கலராக ‘லிப்ஸ்டிக்’ பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். ‘லிப்ஸ்டிக்’ பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து ‘லிப்ஸ்டிக்’ பூசி வந்துள்ளார். கடந்த மாதம் மேயர் […]
வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி,ராட்சசன்,கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால் . இவர் மட்டைப்பந்து வீரரும் ஆவார். கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை . இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு […]
புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமனசமுத்திரம் அருகே சாலையோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து சோதனை செய்தபோது, அந்த காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் பிணமாக கிடந்தது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் […]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை எழும்பூர் தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: *‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய […]
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை. திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை […]
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு கடந்த 22-ந்தேதி சென்றார். பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார்.பின்னர் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.அதன்பின் நியூயார்க் சென்றடைந்த மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். மசாசு செட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்பாடு செய்த வட்ட […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் […]
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
மத்திய முப்படைவீரர் வாரியம் புதுடெல்லி வாயிலாக முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2024-2025-ம் ஆண்டிற்கு (PM Scholarship) அலுவலர் பதவிக்கு கீழ் துஊழு பதவிவரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் “ஆன்லைன்” மூலம் விண்ணப்பித்திடலாம் பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் […]