பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

மத்திய முப்படைவீரர் வாரியம் புதுடெல்லி வாயிலாக முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டம் 2024-2025-ம் ஆண்டிற்கு (PM Scholarship) அலுவலர் பதவிக்கு கீழ் துஊழு பதவிவரை பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் “ஆன்லைன்” மூலம் விண்ணப்பித்திடலாம்
பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள்.
2024-2025-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும். இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2024 ஆகும்.
மேலும் 30.11.2024-க்குள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை அனைத்து அசல் ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என்ற விபரமும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரமும் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
