Month: April 2024

தூத்துக்குடி

தேர்தல் பாதுகாப்பு: சுழற்சி முறையில் போலீசார் பணியாற்ற தேர்வு; ஆட்சியர் லட்சுமிபதி ஏற்பாடு

,தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவல் துறை பணியாளர்கள்  சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக இணையதளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்ரமண்ய […]

கோவில்பட்டி

ஒரே ஒரு மாணவனுக்காக பள்ளிக்கூடத்தை நடத்தும் மாநிலம் தமிழ்நாடு – பிரசாரத்தில் கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று (11/4/2024) ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரசாரத்தில் கனிமொழி […]

செய்திகள்

தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது-மு.க.ஸ்டாலின் பெருமிதம்  

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்குபின் கவனிப்பு கணினி பொருள்கள் ஏற்றுமதி இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவு படுத்துகின்றன,உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்; 30 -ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ந்  தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.தனசேகர் டேவிட் மற்றும் மார்க்கஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.  துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் சாந்தா போர்ஜியா, முத்துலட்சுமி, சண்முக சுந்தரராஜ், தெய்வீக தொல்காப்பியன் ஆகிய 4 […]

சினிமா

`உருவக்கேலிக்கு ஆளானேன்’- நடிகை அபிராமி வேதனை

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அபிராமி கூறும்போது, “உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். […]

சினிமா

நடிகர் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது

 சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, நாளை ,மறுநாள் 13-ந்தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் பங்கேற்கிறார். இந்த விழாவில், நடிகர் ராம்சரண் கலை சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் டி.ஜி.சீத்தாராம் வழங்குகிறார். […]

செய்திகள்

திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளர் :திருமாவளவன் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர […]

தூத்துக்குடி

பாலியல் வன்முறை:  கைதானவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த கைலாசம் மகன் சுப்பிரமணியன் (44) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.  இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த […]

செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய கார் கவிழ்ந்து 6 பேர் பரிதாப சாவு  

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த கனகவேல்  என்பவர் தளவாய்புரம் மாரியம்மன் கோவில் பூமிதி விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்பினார். இன்று காலை தளவாய் புறத்தில் இருந்து மதுரைக்கு விருதுநகர் வழியாக வந்து கொண்டிருந்தார். காரை மணிகண்டன் ஓட்டினார். காலை 6,30 மணி அளவில் சிவரக்கோட்டை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (35) என்பவர் மோதிய காரம் டிரைவரின் கட்ட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் […]