Month: April 2024

தூத்துக்குடி

சுகாதார குறைபாடுகள்: பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிக ரத்து; அதிகாரி அதிரடி

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான மேனகா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினை புகார் ஒன்றின் அடிப்படையில் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பேக்கரியின் தயாரிப்புக்கூடமானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், அதிக ஈக்கள் தொல்லையுடனும், உரிய கணக்குகள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும், அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும், சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்தான விபரங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. மேலும், […]

கோவில்பட்டி

நாகம்பட்டி கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மனோன்மணியம் சுந்தரனாரின் 169 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.  பிறந்த நாள் மலர் மற்றும் இ புத்தகம்  வெளியிடப்பட்டது. பேராசிரியர் மு. பவானி வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் இரா. சேதுராமன் தலைமை தாங்கினார்.. பாலபுரஸ்கார் விருது பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர் கா. உதயசங்கர் சிறப்புரை ஆற்றினார். .அவர் பேசுகையில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய […]

சினிமா

50-வது படம் தயார்: ரசிகர்களுக்கு நடிகை அஞ்சலி நன்றி  

நடிகை அஞ்சலி தமிழில் 2007-ல் வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அஞ்சலியின் 50-வது படமாக தெலுங்கில் ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ என்ற படம் தயாராகி உள்ளது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் அஞ்சலி பங்கேற்று பேசும்போது கூறியதாவது:- எனது 50-வது படம் பிரத்யேகமாக இருக்க வேண்டும்என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசையை ‘கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி’ படம் தீர்த்து வைத்துள்ளது. தமிழ், தெலுங்குமொழிகளில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; 13 ந்தேதி 

கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி திருவிழாவும் ஒன்று. 11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம் ; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள் தயார்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில்.பங்குனி பெருந்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4:30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.காலை 6 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணிவிடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடக்கிறது.மண்டகபடிதாரர் திருக்கோவில். இரவு 7மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர் பிராமனாள் சமூகம். மறுநாள் 6-ந்தேதி காலை […]

கோவில்பட்டி

பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பட்டய சான்றிதழ்

கோவில்பட்டியில் கராத்தே மாணவர்களுக்கு தகுதி கராத்தே பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது.. கஸ்தூரிபா நர்சரி பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் கோவில்பட்டியில் உள்ள கராத்தே பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுகளை கராத்தே மாஸ்டர் விஜயராஜன் நடத்தினார். தொடர்ந்து நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு கஸ்தூரிபா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி சுபா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பாஜகவினர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய்சீலனை ஆதரித்து  சைக்கிள் சின்னத்தில் மாநில மகளிர் பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் தலைமையில் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்கப்பட்டது. நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீதி வீதியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர். மேலும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சுட்டெரிக்கும் வெயில்; இளநீர் விலை உயர்ந்தது

தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலில் தாக்கம் அதிகம் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் அடிக்கிறது. கோவில்பட்டியை எடுத்துக்கொண்டால் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் அளவு அதிகமாகவே உள்ளது, இன்று  வெயில் அளவு 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அனலில் சிக்கி தவித்தனர். வெளியில் அலைந்து வேலைபார்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். கூலி வேலை செய்வோர் வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டனர், […]

சினிமா

‘சீயான் 62’ கதாநாயகியாகும் துஷாரா

சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர்  ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். […]

சினிமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் யார்?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் விஜய். இவர் தற்போது கோட்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக  கூறப்படுகிறது. அடுத்த படத்திற்கு ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என்ற  தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தை  நடிகர் அஜித் குமார் பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் […]