Month: January 2024

செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி மாற்றப்படும் ஆட்சியர்கள்; புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பதவி

திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உதயாமான தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர்கள் மாற்றம் என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்சியர் முழுமையாக ஒரு வருடம் கூட பணியாற்றாமல் மாற்றப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் 22.11.2019 முதல் 15.1.2020 வரையிலும், சமீரன் 15.12020 முதல் 15.6.2021 வரையிலும், கோபால சுந்தரராஜ் 17.6.2021 முதல் 14.6.2022 வரையிலும், ஆகாஷ் 16.6.2022 முதல் 6.2.2023 வரையிலும், துரை. ரவிச்சந்திரன் 6.2.2023 முதல் 28.1.2024 வரையிலும் […]

செய்திகள்

தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையே முரண்பாடுகள்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக் கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் பிரச்சார குழு மற்றும் தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு ஆலோசனை நடத்தியது.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- […]

கோவில்பட்டி

செய்தித்தாள் வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்ட மாணவர்கள்

செய்திதாள்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜனவரி 29ம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள்  செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன்,பள்ளி தலைமையாசிரியர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ரோட்டரி கிளப்  மாவட்ட முன்னாள் […]

கோவில்பட்டி

கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயற்குழு கூட்டம் மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கோபாலகிருஷ்ணன் , இணைச் செயலாளர் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் கற்பூரராஜ் , ஜெகன் மோகன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. *தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கபபட்டது.   *மொழிவாரி சிறுபான்மையினர் சான்றிதழ் முறையாகவும் காலதாமதம் இன்றி வழங்க வேண்டி கொடுக்கப்பட்ட […]

கோவில்பட்டி

பொது கழிப்பறை வசதி கேட்டு வில்லிசேரி கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் இன்று 29.01- 2024 காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியை அடுத்த வில்லிசேரி கிராமத்தில் சமத்துவபுரம் செல்லும் சாலையின் இருபுறத்திலும் மனித கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏற்கனவே 12 கழிப்பறைகள் இருந்த இடத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து அகற்றப்பட்டு புதிதாக கழிப்பறை கட்டி கொடுக்கப்படும் என்று சொல்லியும் தற்போது வரை கழிப்பறைகள் கட்டி கொடுக்காமல் காலம் கடத்தி வரப்படுகிறது.  ஏற்கனவே வில்லிசேரி […]

கோவில்பட்டி

`தமிழக மக்களை 13 வருடமாக ஒருதலையாக காதலிக்கிறேன்-ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்’; கோவில்பட்டி கூட்டத்தில்

கோவில்பட்டியில் புரட்சி தீ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி முத்துகுமார், பழனிபாபா ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. மெயின்ரோட்டில் உள்ள காமராஜர் சிலை அருகே மேடை அமைக்கபட்டு இருந்தது. இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சை கேட்க கூட்டம் திரண்டு வந்தது. காமராஜர் சிலை அருகே இருந்து கருவாட்டு பேட்டை வரை சாலையில் மக்கள் கூடி […]

செய்திகள்

பேட்ஸ் தொண்டு நிறுவன விருது வழங்கும் விழா

கொவில்படியில் பேட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த் நிகழ்ச்சியில் பா.ஜனதா வடக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

செய்திகள்

தேமுதிக தொண்டர்களுடன் பிரேமலதா சந்திப்பு

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கணவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகம் வந்தார்.  அவரது வருகையை ஒட்டி கட்சி தொண்டர்கள் அதிகமானவர்கள் திரண்டு இருந்தனர். கட்சி அலுவலகத்தில் தேமுதிக கொடியேற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.  பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். விஜயகாந்த் விருப்பப்படி கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். நடைபெற இருக்கும் தேர்தலில் தீவிர கட்சி பணியாற்ற வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக்கொண்டார்

கோவில்பட்டி

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது பற்றி

கோவில்பட்டி கிழக்கு  ஒன்றிய பா. ஜனதா செயற்குழு கூட்டம் ராஜீவ் நகர் இ.பி.காலனி பகுதியில் நடைபெற்றது ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர்கள் வசந்த்,சந்தானம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினராக பார்லிமென்ட் பொறுப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் சக்தி கேந்திர பணிகள் பற்றியும் விரிவாக கிளைத் தலைவர்களுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளருக்கும் எடுத்துரைத்தார். கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மோகன், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி,ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் […]

கோவில்பட்டி

தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் கோவில்பட்டி  வீராங்கனைக்கு கீதாஜீவன் வாழ்த்து 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் வர்ஷினி.  இவர் 15 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அரியானா சென்று விளையாடி வந்திருக்கிறார். இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – கீதாஜீவனை, தூத்துக்குடி போல்பேட்டை இல்லத்தில் நேற்று (27.1.2024) சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அமைச்சர் கீதாஜீவன்,விளையாட்டு வீராங்கனை வர்ஷினியை வாழ்த்தியதுடன், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற […]