தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் கோவில்பட்டி வீராங்கனைக்கு கீதாஜீவன் வாழ்த்து
![தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் கோவில்பட்டி வீராங்கனைக்கு கீதாஜீவன் வாழ்த்து](https://tn96news.com/wp-content/uploads/2024/01/IMG-20240128-WA0202-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகள் வர்ஷினி.
இவர் 15 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முதல் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அரியானா சென்று விளையாடி வந்திருக்கிறார்.
இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – கீதாஜீவனை, தூத்துக்குடி போல்பேட்டை இல்லத்தில் நேற்று (27.1.2024) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அமைச்சர் கீதாஜீவன்,விளையாட்டு வீராங்கனை வர்ஷினியை வாழ்த்தியதுடன், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வின் போது விளையாட்டு வீராங்கனை வர்ஷினியுடன் அவரது பயிற்சியாளரும் பகடா ஸ்போர்ட்ஸ் உரிமையாளருமான விஜய் உடனிருந்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)