• May 20, 2024

பொது கழிப்பறை வசதி கேட்டு வில்லிசேரி கிராம மக்கள் போராட்டம்

 பொது கழிப்பறை வசதி கேட்டு வில்லிசேரி கிராம மக்கள் போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் இன்று 29.01- 2024 காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டியை அடுத்த வில்லிசேரி கிராமத்தில் சமத்துவபுரம் செல்லும் சாலையின் இருபுறத்திலும் மனித கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏற்கனவே 12 கழிப்பறைகள் இருந்த இடத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து அகற்றப்பட்டு புதிதாக கழிப்பறை கட்டி கொடுக்கப்படும் என்று சொல்லியும் தற்போது வரை கழிப்பறைகள் கட்டி கொடுக்காமல் காலம் கடத்தி வரப்படுகிறது.

 ஏற்கனவே வில்லிசேரி கிராமத்தில் 5000 மக்கள் வசித்து வரும் நிலையில் போதிய பொது கழிப்பறைகள் இல்லாத நிலையில் திறந்த வெளி கழிப்பிடம் சென்று வரும் நிலையில் சுகாதார சீர்கேடும், நோய் பரவும் நிலையில் உள்ளது. வில்லிசேரி பஞ்சாயத்து சார்பில்  மேற்படி இடத்தில் கழிப்பறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றியும், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் தற்போது வரை கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்படவில்லை.

ஆகவே, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தினை கண்டிக்கும் விதமாக இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்த்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையிலும், மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி முன்னிலையிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது .இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *