பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மலர் காவடி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மலர் காவடி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.வேளாங்குறிச்சி ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானங்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவைகவுமார மடாலயம், தமிழ்நாடு முருக […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதி பெய்த அதிகனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலானோரின் தொழில்கள் முடங்கியுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் அரசு மற்றும் தனியார் வழங்கும் நிவாரண பொருட்கள் மூலம் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் 3-ம் பருவ கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளுக்கு 3- ம் பருவ […]
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய தொழில்துறை, வர்த்தகம்,நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளி துறை மந்திரி .பியூஷ்கோயல் கலந்து கொண்டார். இன்று (8.1.2024) சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று மத்திய மந்திரி பியூஸ் கோயல், விஜயகாந்த் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேமுதிக பொதுச்செயலாளரும் விஜய்காந்த் மனைவியுமான பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. […]
.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய்,சனி போன்ற கோள்களை காணும் வான் நோக்கல் நிகழ்வு போன்ற செயல்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொண்டு செல்லும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. மேலும் நட்சத்திர விழாக்கள், நிலா திருவிழா-200, அரசு பள்ளி மாணவர்களுக்கான புதியன விரும்பு நிகழ்வு, புத்தகத் திருவிழா, ஏற்காடு மலர் கண்காட்சி, 1000 இடங்களில் அஸ்ட்ரானமி என […]
தூத்துக்குடி செல்வநாயகபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 67). இவரது கணவர் அந்தோணி பிச்சை 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு டெரிசன், ரூபேசன் (40) ஆகிய மகன்களும் சபீதா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். தூத்துக்குடி சக்தி விநாயகபுரம் 1-வது தெருவில் உள்ள தாய் வீட்டின் மாடி பகுதியில் தனியாக வீடு கட்டி ரூபேசன் குடியிருந்து வந்ததாராம். இந்த் நிலையில் தாய் கலைச்செல்விக்கும் ருபேசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு […]
பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடியை அறிவிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அதிக கனமழை பெய்த மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவித்திட கோரி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டயபுரம் தாலுகா குழு செயலாளர் சோலையப்பன் தலைமையில் எட்டையபுரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசு பேரிடர் பாதித்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். மாநில அரசு கேட்ட பேரிடர் இழப்பு தொகையினை மத்திய அரசு […]
கோவில்பட்டி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கிளை சார்பாக, கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றிய ஆவண படம் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் எழுதிய “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” என்ற புத்தக ஆய்வு மற்றும் எட்டயபுரத்து ஏழிசை புலவா என்ற பாடல் வெளியிடும் நிகழ்வு ஆகியவை கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளைச் செயலாளர் அமல புஷ்பம் தலைமை தாங்கினார், தமிழ் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப திருவிழா , ஆலய பங்கு தந்தை சார்லஸ் அடிகளார், தலைமையில் உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சூசையப்பரும் அன்னை மரியாவும், இறைமகன் இயேசுகிறிஸ்துவும் வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பமாகும்.இக்குடும்பத்தில் நிலவிய அன்பு,அக்கறை,நம்பிக்கை,இறைஞானம் இவை அனைத்தும் இறைமக்களான நம் குடும்பத்தில் நிலவவேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ ஆலயங்களில் திருக்குடும்ப திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு […]
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மத்திய பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநாடு தொடக்க நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், ஹூண்டாய், ஜே.எஸ்.டபிள்யூ, அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும் பல முன்னணி பன்னாட்டு […]
சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற இலக்குடன், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இன்றும் நாளையும், (7,8தேதிகள் )உலக முதலீட்டாளர்கள் […]