பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் தொண்டர்கள் அஞ்சலி; கோவில்பட்டி சோதனைசாவடியில் போலீஸ் குவிப்பு
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் 12-வது நினைவு தினம் இன்று (10.1.2024) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வேன், கார்களில் குவிந்து வருகிறார்கள்.வெளியூர் வாகனங்கள் கோவில்பட்டி வழியாக கடந்து சென்றன. தொண்டர்கள் காரில் இருந்தபடி கோஷம் எழுப்பியபடி செல்கிறார்கள். கோவில்பட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான இளையரசனேந்தல் சாலை சோதனை சாவடியில் ஏராளமான […]