கோவில்பட்டி பணிமனையில் இருந்து வழக்கம் போல் இன்று பஸ்கள் இயங்கின

 கோவில்பட்டி பணிமனையில் இருந்து வழக்கம் போல் இன்று பஸ்கள் இயங்கின

போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு  96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

நேற்று மாலை புறப்பட்ட நீண்டதூர பஸ்கள்  நள்ளிரவு 12 மணிக்கு எந்த ஊரில் இருந்ததோ அந்த ஊர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டபிறகு தனது சேவையை நிறுத்திக்கொண்டன

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கோவில்பட்டி உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து மொத்தம் 302 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில்  80 சதவிகிதம் பேருந்துகள் இன்று காலை வழக்கம் போல் இயங்கின. பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருகின்றனர். திமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன,

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இன்று அதிகாலையில் இருந்து  வழக்கம் போல் பஸ்கள் இயங்கின/. வழக்கமாக தினமும் கோவில்பட்டி பணிமனையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 34 பஸ்கள் இயக்கப்படும். இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையிலும் வழக்கம்போல் 34 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதே சமயம் மதுரை யில் இருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்கள் தினமும் 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் என்ற விகிதத்தில் கோவில்பட்டி புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் அரசு பஸ்கள் இன்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் என்ற அளவில் வந்தன. அந்த பஸ்களிலும்  பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் இருந்து  திருநெல்வேலி சென்ற ஒரு பஸ் கோவில்பட்டி கூடுதல்  பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டபிறகு அந்த பஸ்சில் 8 பயணிகள் மட்டுமே இருந்தனர். இதனால் அந்த பயணிகளை கோவில்பட்டியில் பாதி வழியில் இறக்கிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள், வேறு பஸ்சில் திருநெல்வேலி புறப்பட்டு சென்றனர்,.

மேலும் பெரும்பாலான போக்குவரத்து கழக பணிமனைகளில் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் இருந்த போதும் ஒரு பணிமனைக்கு  தற்காலிகமாக 40 ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வீதம் தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கையை அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை இருப்பதால் அனைத்து பஸ்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *